Editorial / 2018 நவம்பர் 05 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கினால், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்போம் என நாமல் ராஜபக்ஷ கூறுவதை விடவும், அவருடைய தந்தை பிரதமர் பதவியை ஏற்றுள்ளமையால்,
அரசியல் கைதிகளை முடிந்தால் இன்றைக்கே விடுதலை செய்யட்டும். தாம் அவர்களுக்கு ஆதரவளிப்பது பற்றிப் பரிசீலிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் வவுனியா இளைஞர் மாநாடு, வவுனியாவில் நேற்று (04) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
எத்தனை கோடி ரூபாய்க்களைக் கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலைபோகமாட்டாது என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் உறுப்பினரான மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. வியாழேந்திரன் மரம் தாவியுள்ளார். அவருக்கு உரிய நடவடிக்கைகளை எமது கட்சி எடுக்கும்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் எம்மால் உருவாக்கப்பட்டவர்களே. இருவரும் தாம் ஏறிவந்த ஏணியை எட்டி உதைந்துள்ளார்கள்”
என்றார் தன்னுடைய அரசியல் வாழ்க்கை, இந்தத் தடவையுடன் ஆறடி மண்ணில் குழிதோண்டிப் புதைக்கப்படும் என கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தெரிவித்திருந்தார். எனினும், தற்போது, கூட்டுச்சேர்ந்து, ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றார்.
6 minute ago
9 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
14 minute ago
18 minute ago