Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று (19) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா செயற்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அவர் லெப்டினட் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டு இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட சவேந்திர சில்வா, தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது, 53ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்தார்.
சவேந்திர சில்வா, வீர விக்கிரம பதக்கம், உத்தம சேவா பதக்கம், ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் ஆகிய விருதுகளை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
30 minute ago
33 minute ago
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
33 minute ago
51 minute ago
57 minute ago