2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இலங்கைக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்

J.A. George   / 2023 நவம்பர் 14 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை அண்மித்து  6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தென் பகுதியில், கொழும்பிலிருந்து சுமார் 1326 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 12:31 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. அதே போன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .