Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரை உலகில் உள்ள 197 நாடுகள் அடக்கம் செய்யும்போதுஇ இலங்கையில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பிய இஷாக் ரஹ்மான் எம்.பி, முஸ்லிம்கள் ஈழத்தைக் கேட்கவில்லை.
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்ய வேண்டுமென்றே கேட்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என்றார்.
சுற்றாடல், வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. நாட்டின் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதில்லை. எனினும் முஸ்லிம்களின் பெயரைப் பயன்படுத்தி சிலர் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.
கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என தொற்று நோய் விசேட நிபுணர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் ஒருபோதும் ஈழத்தையோ, நாட்டைப் பிரித்து தருமாறோ கேட்கவில்லை. எங்களது மத சம்பிரதாயங்களின்படி உயிரிழப்போரை அடக்கம் செய்யவே வழக்கமாக இருக்கிறது. எனவே, இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. எனவே, இதுத் தொடர்பில் ஜனாதிபதி, சபாநாயகர் என அனைவரும் கவனஞ் செலுத்த வேண்டும்.' எனக் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago