Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 பெப்ரவரி 02 , மு.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
கூட்டத்தை ஒத்தி வைப்பது தொடர்பான அதிகாரம் பதில் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. இது ஒரு சட்ட ரீதியான விடயமாகும் அந்த அடிப்படையில் கூட்ட தீர்மானம் என்ன என்பது தொடர்பில் அவர் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக நான் அறிகின்றேன். அதற்குரிய கடிதத்தையும் நான் பார்த்திருந்தேன்.
இந்த விடையம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்கள் வழங்கினால் உட்கட்சி முரண்பாடுகள் பல வரும் காரணமாக இதுதொடர்பில் மேலதிக விபரங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சேனாதிராஜா, கட்சியின் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்திருந்தார். உண்மையிலேயே கட்சியின் கூட்டங்களை நடாத்துவது, அதனை ஒத்திவைப்பது தொடர்பான அதிகாரங்கள் பொதுச் செயலாளருக்குத்தான் உண்டு. திருகோணமலையில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு பதில் பொதுச் செயலாளராக கடமையாற்றிய டொக்டர் சத்தியலிங்கம் வருகை தராத காரணத்தினால் கட்சியின் யாப்பின் பிரகாரம் இரண்டாவது துணைச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.
எனவே கூட்டத்தை நடாத்துவது. அதனை ஒத்தி வைப்பது தொடர்பான அதிகாரம் பதில் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. இது ஒரு சட்ட ரீதியான விடயமாகும் அந்த அடிப்படையில் கூட்ட தீர்மானம் என்ன என்பது தொடர்பில் அவர் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக நான் அறிகின்றேன். அதற்குரிய கடிதத்தையும் நான் பார்த்திருந்தேன். இந்த விடையம் தொடர்பில் ஊடகங்களுககு கருத்துக்கள் வழங்குவது தொடர்பில் உட்கட்சி முரண்பாடுகள் பல வரும் காரணமாக இதுதொடர்பில் நான் மேலதிக விபரங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கம் மூன்று வருடங்களாக வழங்காமல் உள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்க வேண்டும்.
யுத்தம் முடிவுற்று 15 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் இன்றுவரையில் எமது கோரிக்கைகள் அனைத்தும் தெற்கிலே இருக்கின்ற மாவட்டங்களோடு சமநிலைப்படுத்துவதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அவற்றை மேற்கொள்வதற்குத் தவறியிருக்கின்றன.
தேர்தல் வரவிருக்குமு் ந்நிலையில் 25 கோடி ரூபாய் நிதிதான் இந்த மாவட்டத்திற்கு தற்போது அபிவிருத்திக்காக வந்துள்ளது. அதுவும் மாவட்ட செலயகத்தின் ஊடாகத்தான் இந்த ஒதுக்கீடுகள் வருகின்றன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே எந்த ஒதுக்கீடும் இல்லாத நிலையே இருக்கின்றது. இந்நிலையில் மக்களுடைய சிறிய சிறிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.
இதேவேளை நிருவாக ரீதியான சீர்கேடுகளை நாம் சீர் செய்வதற்குரிய முயற்சிகளை எடுத்தாலும்கூட மக்களுடைய பொதுவான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நிதி தொடர்பான விடையத்தில் போதுமான அளவு நிதியில்லை.மாறாக தெற்கிலே பல விடையங்க் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. (a)
27 minute ago
50 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
50 minute ago
2 hours ago
3 hours ago