2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஊதிய வரி: அரசாங்கம் அதிரடி தீர்மானம்

Freelancer   / 2023 ஜனவரி 09 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச மற்றும் அரசு சார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்களின் ஊதிய வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  நிதியமைச்சு திங்கட்கிழமை (09) தெரிவித்தது.

இது தொடர்பான சுற்றறிக்கை இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அளவைத் தாண்டி வருமானம் ஈட்டும் அரச மற்றும் அரசு சார் நிறுவனங்களின் ஊழியர்களுக்காக வரி அறிமுகப்படுத்த ப்பட்டதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், நிறுவனங்களின் நிதி வரி செலுத்துவதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

இதன் மூலம் அரச மற்றும் அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கு நிறுவனங்களின் நிதியின் ஊடாக வரி செலுத்துவதை தடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .