2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஊரடங்கு குறித்து பேராசிரியர் அதிரடி அறிவிப்பு

Editorial   / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் முறைமை மிகவும் நல்லது. தற்போதைய நிலையில் யார் என்ன சொன்னாலும் நாட்டை முழுமையாக திறக்காமல், இந்த முறையிலேனும் நாட்டை மூடி வைத்திருப்பது நல்லது. என ராகம வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்தார்.

இவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் போது நாட்டின் பொருளாதாரம் குறித்தும் சிந்திக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், கைத்தொழிற்சாலைகள் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் செயற்படுவது எவ்விதமான சிக்கல்களும் இல்லை என்றார்.

தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்  அவ்வாறே அமுலில் இருக்கவேண்டுமா என்பது தொடர்பில் தன்னால் எதுவும் தெரிவிக்கமுடியாது. தற்போது அமுலில் இருக்கும் செயற்பாடுகளின் பெறுபேற்றை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .