Editorial / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒக்சீஜன் கொண்டுவந்த டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, கசிவை அடைக்க ஒக்சீஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதால், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா தொற்றாளர்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாசிக் நகரில் ஜாகீர் ஹுசைன் நகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒக்சீஜன் விநியோகம் செய்வதற்காக ஒக்சீஜன் டேங்கர் லொறி இன்று வந்தது.
மருத்துவனையில் உள்ள ஒக்சீஜன் டேங்கருக்கு, லாரியிலிருந்து ஒக்சீஜனை மாற்றும்போது திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஒக்சீஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
ஆனால், மருத்துவமனையில் ஐசியூ வார்டில் கொரோனா தொற்றாளர்கள் பலர் ஒக்சீஜன் சிகிச்சையுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். திடீரென ஒக்சீஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, 22 நோயாளிகள் உயிரிழந்தனர்.
18 minute ago
22 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
26 minute ago
2 hours ago