Editorial / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் வீதித்தடைகளை பல்கலைக்கழக மாணவர்கள் தாண்ட முற்பட்ட நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிஸாரால் போராட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் வாகனங்களில் ஏற்றினர்.

மேலும் சம்பவத்தில் மிதுசன், கவிதரன், எழில் ராஜ், அபிஷேக், நிவாசன் ஆகிய ஐந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து போராட்டகாரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிதர்ஷன் வினோத்

17 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago