Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 06 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதிக்ககட்ட யுத்தத்தில் காணாமல் போனோரினதும் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தோரினதும் பெயர்ப் பட்டியலை தாம் வெளியிடத்த தயார் என வெளியாகிய செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென காணாமல் போனோர் தொடர்பிலான நிரந்தர அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.கடந்த 2ஆம் திகதி முல்லைத்தீவில் காணாமல்போனோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களையும் சிவில் சமூக அமைப்பினரையும்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சந்தித்த காணாமல் போனோர் தொடர்பிலான நிரந்தர அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் அலுவலகத்தின் அமைப்பு ரீதியான திட்டங்களையும் உபாய மார்க்கங்களையும் தெளிவுபடுத்தியிருந்தனர்.
எனினும், ஊடகங்களில் சரணடைந்தோரின், காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை குறித்த அலுவலகத்தின் தவிசாளர் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இறுதிக்ககட்ட யுத்தத்தில் காணாமல் போனோரினதும் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தோரினதும் பெயர்ப் பட்டியலை தாம் வெளியிடத்த தயார் என சாலிய பீரிஸ் குறிப்பிடவில்லை, எனவும் அலுவலகத்தில் அவ்வாறான தகவல்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல் கிடையாது என்றே அவர் குறிப்பிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025