Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் முன்னேஸ்வரத்தில் உள்ள காளி கோவிலில் இருந்த காளி சிலையை யாரோ திருடிக்கொண்டு சென்றுவிட்டனர் என முறைப்பாடு கிடைத்துள்ளது என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த கோவிலுக்குப் பொறுப்பானவர் என்றுக் கூறப்படும் பெண்ணால், இதுதொடர்பில் பொலிஸூக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவிலில் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் வைக்கப்பட்டிருந்த காளி சிலையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது என்றும் யாரோ அச்சிலையை திருடி சென்றிருக்கின்றனர் என தான் சந்தேகப்படுவதாக அப்பெண் தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது. எனினும், அப்பெண்ணிடம் இதுதொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, எதனையும் கூறுவதற்கு அப்பெண் மறுத்துவிட்டார். எனினும், பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என சிலாபம் பொலிஸின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், அவர்கள் கோவிலுக்கு விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
40 minute ago