Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 07 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவுள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியான நாள் ஒன்றை அறிவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், சில விடயங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்திக்கொள்வதற்கு, விசாரணையாளர்கள் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீத் நோயர் கடத்தப்பட்ட தகவலை உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தாமே தெரியப்படுத்தியதாகவும், அதன் மூலமே அவர் காப்பாற்றப்பட்டதாகவும் சபாநாயகர் கரு ஜ யசூரிய தெரிவித்திருந்தார்.
அத்துடன் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
42 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
45 minute ago
1 hours ago