2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

குருநாகல் DIGயின் இடமாற்றம் இரத்து

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல்  பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், திருகோணமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

இன்று காலை இந்த விடயம் தொடர்பில் மீண்டும் விவாதித்த பின்னர், இடமாற்றத்தை இரத்து செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X