Editorial / 2020 மார்ச் 28 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐடிஎச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் நீரழிவு நோய் மற்றும் உயர் குருதியழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சீனப்பெண் ஒருவர் உள்ளிட்ட 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 101 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு பதிவான முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
3 minute ago
14 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
24 minute ago
31 minute ago