Editorial / 2021 ஜூன் 21 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோட்டை ரயில் நிலையம் முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸாருக்கும், பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
கொத்தலாவல தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பதாதைகளை தம்வசப்படுத்தினர். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரையும் சிறைப்பிடித்தனர். இதனையடுத்தே, ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 புதிய சுற்றறிக்கை, வழிகாட்டல்களின் பிரகாரம், மக்கள் ஒன்றுக்கூடுவது தடைவிதிக்கப்பட்டுள்ளது, கடந்த ஒருமாதகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை, ஒருமாதத்துக்குப் பின்னர், இன்று (21) நாடளாவிய ரீதியில் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago