2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கோப்பாய் தாக்குதல்: 2 சந்தேகநபர்கள் சிக்கினர்

Editorial   / 2017 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், கோப்பாய்ப் பகுதியில், பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில், இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

20, 23 வயதுகளையுடைய குறித்த 2 இளைஞர்களும், இன்று (01) காலை கைதுசெய்யப்பட்டனர் என்று, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொக்குவில் நந்தாவில் பகுதியில், பகல்நேர நடமாடும் கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் மீதே, கடந்த ஞாயிற்றுக்கிழமை (30), இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களான சுரேன் (வயது 26), தம்மிக்க (வயது 36) ஆகிய இருவரும் காயங்களுக்கு உள்ளாகி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X