2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கோப்பாய் வாள்வெட்டு: மேலும் இரு இளைஞர்கள் கைது

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பொலிஸாரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவரை தேடி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X