2025 மே 14, புதன்கிழமை

'சஜித்தின் தோல்விக்கு நான் காரணமல்ல’

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் வெளியிட்ட கருத்துகள் காரணமாகவே புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்கள் காரணமாக, கடந்த அரசாங்கத்தின் மீது நாட்டின் அதிகளவான மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியதுடன், தான் முன்னர் கூறிய விடயங்களை ஒருபோதும் வாபஸ் பெறப்போவதில்லை என்றும் தான் கூறிய விடயங்கள் உண்மையானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .