2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சில நிமிடங்களில் நாடு இருளில் மூழ்கும்?

Freelancer   / 2022 ஜனவரி 18 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் பற்றாக்குறையால், 2 மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையால் 6 மணிக்குப் பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் பெறப்பட்ட எரிபொருள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே நீடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

சப்புகஸ்கந்த அனல்மின் நிலையத்தில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகளில் ஒன்று உலை எண்ணெய் பற்றாக்குறையால் இன்று நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்தது.

அத்துடன், களனிதிஸ்ஸயில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கியால் மாத்திரம் டீசலுக்கு மேலதிகமாக, நெப்டாவை பயன்படுத்தி இயக்க முடியும் என்றும் நெப்டா தற்போது முழுமையாக தீர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாலை 6 மணி வரை மாத்திரமே மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளதால், 6 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் எரிபொருள் கோரிக்கையை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (ஐஓசி) நிராகரித்துள்ளது என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொகே, சற்று முன்னர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .