Nirosh / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று, ஏனைய நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் உள்ள 14 அரசியல் கைதிகள் தொடர்பான விவரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுத் தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளான வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் 810 கைதிகள் நோய்த் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஏனைய சிறைச்சாலைகளுடன் ஒப்பிடுகையில் மகசீன் சிறைச்சாலையிலேயே தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்த நிலையில், மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இவர்களில், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அடங்கலாக, வைத்தியர் சிவரூபன், இந்து மதகுருவான இரகுபதி சர்மா உட்பட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு,
01. சின்னையா சிவரூபன்
02. சி.ஐ. இரகுபதி சர்மா
03. எட்வேட் சாம் சிவலிங்கம்
04. தங்கவேல் சிவகுமார்
05. நாகலிங்கம் மதனசேகர்
06. தேவசகாயம் உதயகுமார்
07. குலசிங்கம் குலேந்திரன்
08. றுபட்ஷன் யதுஷன்
09. சேவியர் ஜோண்ஷன் டட்லி
10. தாவீது நிமல்ராஜ் பிரான்சிஸ்
11. விநாயகமூர்த்தி நெஜிலன்
12. இரத்தினம் கிருஷ்ணராஜ்
13. சின்னமணி தனேஸ்வரன்
14. ஞானசேகரம் ராசமதன் ஆகியோரே சிறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை குறைக்கும் முகமாக சில பொறிமுறைகளுக்கூடாக அரசாங்கம் 6000 கைதிகளை விடுவித்துள்ளது. எனினும், அதில் ஒரு தமிழ் அரசியல் கைதியேனும் உள்வாங்கப்படவில்லை. இதனால், அரசியற் கைதிகளின் பெற்றோர், உறிவினர் மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.'' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
49 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
3 hours ago