Editorial / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், எந்தவோர் இடத்திலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளியென பெயரிடப்படவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியுமா என்பதை ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சந்தர்ப்பம் வழங்குமாறே அதில் கூறப்பட்டுள்ளது என்றார்.
“ மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட்டே மீண்டும் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார். அதனையும் அவர்கள் தவறாக புரிந்துள்ளனர்” என்றார்.
நாவல பிரதேசதத்தில் நேற்று (5) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பேராயரின் வருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், குண்டு வீசியவர் மைத்திரிபால அல்லர்: குண்டுவீசியவரை கண்டுப்பிடிக்கவும். இல்லாவிட்டால், உண்மையான குற்றவாளி யாரென்பது மறைந்து விடும் எனவே, நாம் தனிப்பட்ட ரீதியிலோ எமது தலைவருக்காகவோ இதனை சொல்லவில்லை. குண்டை வீசியவரைத் தேடுவதே எமக்குள்ள பிரச்சினை. இதன் பின்புலத்தில் இருந்த சக்தியை கண்டுப்பிடிக்கும் வரையிலும் நாம் எமது போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றார்.
“ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வருகையில் அதனை அழிப்பது சிலரது தேவையாகவுள்ளது. அதற்காக சிலர் செயற்படுகின்றனர். அதற்காக கலவரமடையத் தேவையில்லை” என்றார்.
நாட்டுக்குத் தேவையான சக்தியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவோம். இதனால் யாருக்கும் சவால் இல்லை. நாம் கட்சியை பலப்படுத்தி முன்னோக்கி செல்கையில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறும். ஆனால், நாம் பதற்றமடையமாட்டோம் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மாத்திரமா? இதற்குப் பொறுப்பு எனக் கேட்ட அவர், அன்றிருந்த அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். அவர்கள் எல்லோரையும் ஓரங்கட்டிவிட்டு, மைத்திரிபால சிறிசேனவை மட்டுமே பிடித்துக்கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், இது எமது கட்சியை பலப்படுத்த எடுக்கும் முயற்சியை குழப்புவதற்கான செயற்பாடாகும் என்றார்.
எனவே, இதன் பின்னணியில் அரசியல் சக்தியொன்று உள்ளதென நாம் நினைக்கிறோம். எனவே கர்தினாலும் அரசியல் மாயாகி உள்ளாரென்றே எமக்குத் தோன்றுகின்றது என்றார்.
18 minute ago
22 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
26 minute ago
2 hours ago