2025 மே 14, புதன்கிழமை

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கைகோர்த்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளன.

இலங்கை மன்றக் கல்லூரியில் சற்று முன்னர் இந்த ஒப்பந்தம் கைசாத்திப்பட்டுள்ளது.

இரு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களால் கையொப்பம் இடப்பட்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தவிசாளர் பேராசிரியர் G.L. பீரிஸ் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .