2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சுவிசர்லாந்து தூதரகத்துக்கு முன்னால் உண்ணாவிரதம்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரக பெண் அதிகாரியிடம் உடனடியாக பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என, தெரிவித்து தாய்நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன, சுவிசர்லாந்து தூதரகத்துக்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கடத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரக பெண் அதிகாரி, தூதரகத்துக்குள் ஒளிந்துகொண்டுள்ள நிலையில், பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தூதுவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் சம்பவம் பொய்யானது என்பது தற்போது உறுதியாகியுள்ள நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டு காரணமாக நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்படுவதாக ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X