Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டார்.
கொழும்பு காலிமுகத்திடலில் தற்போது இடம்பெற்று கொண்டுள்ள பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் மேலும் 28 அமைப்புகளை ஒற்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியினால் இந்த பேரணியும் பொதுக்கூட்டமும் காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றை கூட்டத்தின் போது தமது அணியின் ஜனாதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்திருந்தமைக்கு அமைய தமது வேட்பாளரை இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் பெயரிடப்பட்டார்.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி தமது ஜனாதிபதி வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago