A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள், இன்று செவ்வாய்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முருது பெர்னாண்டோ, பத்மன் சுரஷேன ஆகியோர் முன்னிலையில் இம்மனுக்களுக்கான விசாரணைகள் இடம்பெற்றன.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பர், பைஸர் முஸ்தபா மற்றும் விரான் கொரயா உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.
மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா நேற்றுமுற்பகல் வேளையில் ஆரம்ப வாதங்களை முன்வைத்து, சமர்ப்பணம் செய்துள்ளார்.
இம்மனுக்களை ஆட்சேபித்து கொரோனா தொற்று நோயினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்கள் எரிக்கப்பட வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயரத்ன ஆஜராகி இருந்தார்.
39 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago