2025 மே 07, புதன்கிழமை

ஜனாஸாக்கள் விவகாரம்; ஆராய்வதாக மாலைத்தீவு அறிவிப்பு

Nirosh   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்வதுத் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையை, மாலைத்தீவின் ஜனாதிபதி ஆராய்ந்துப் பார்ப்பதாக தெரிவித்துள்ளாரென அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹிடத் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் டுவிட் செய்துள்ள அவர், "இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை உறுதி செய்வதற்கும், தொற்றுநோயின் சவால்களை சமாளிக்க உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாலைத்தீவு ஜனாதிபதி விரும்புகிறார்." எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X