Freelancer / 2023 டிசெம்பர் 01 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டாம் இணைப்பு
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இரண்டாவது நாளாக இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (01) பிற்பகல் கைது செய்தனர்.
முதலாம் இணைப்பு
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சில மாதங்களாக வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ நேற்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது. R
16 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
42 minute ago