Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Yuganthini / 2017 ஜூலை 10 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தமிழரசுக் கட்சியை மீள புனரமைப்புச் செய்வதற்கான உரிமை மாவை சேனாதிராஜாவுக்கு இல்லை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அவர், நேற்று (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“பிரபாகரனுக்கு இருநூறு வருடங்கள் தண்டனை விதித்தபோது நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் யசீர் அரபாத் போன்று பிரபாகரனும் உலகை சுற்றிவரும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை கூறியிருந்தேன்.
பல சந்தர்ப்பங்களில் அவரை ஆதரித்தே பேசி வந்துள்ளேன். ஒருநாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தையை பார்த்து பத்து ஆண்டுகள் போராடினாலும் உங்களால் பளை பிரதேசத்தை மீளக் கைப்பற்றமுடியாது என்றும், ஆனையிறவு முகாமை கைப்பற்றுவது பகற் கனவு என்றும் கூறியிருந்தேன்.
ஆனால் வேடிக்கை என்னவெனில் ஆர்.சம்பந்தனும் சேனாதிராஜாவும் இணைந்து, நான் ஆனையிறவை இராணுவத்தினரிடம் திரும்ப கையளிக்க வேண்டுமென கூறியதாகக் காரணம் காட்டி என்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அலைந்து திரிந்தனர்.
“இந்தக் கட்டத்தில் அவர்களுக்கு ஒரு சவால்விட விரும்புகின்றேன். நான் அவ்வாறு கூறினேன் என திருகோணமலை காளிகோவிலில் சத்தியம் செய்வார்களாக இருந்தால், அந்த நிமிடத்திலிருந்து இறுதிவரை அவருக்கு அடிமையாக சேவகம் செய்யத் தயாராக இருக்கின்றேன்.
“சேனாதிராஜாவுடைய பெரிய சதி யாதெனில், தந்தை செல்வா அவர்களால் செயலிழக்கச் செய்யப்பட்டு அவர் இறந்து 28 ஆண்டுகளின் பின் அவருடைய கட்சியை எவருடைய அனுமதியும் இன்றி சு.ப.தமிழ்ச்செல்வனுடன் இணைந்து பணியாற்றிய தங்கனின் கட்டளைக்கமைய, கட்சியைப் புனரமைப்பு செய்ய முயற்சித்தார்.
“எதற்கும் ஓர் எல்லை உண்டு. தமிழரசுக் கட்சியைப் புனரமைப்புச் செய்கின்ற சட்ட உரிமை தனக்கு இல்லையென்பதை சேனாதிராஜா ஒத்துக்கொள்ள வேண்டும்.
அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு தமிழரசுக் கட்சியை மீள புனரமைப்புச் செய்ய முடியாது.
“சேனாதிராஜாவின் இந்தச் சிந்தனையற்ற செயலால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள், விடுதலைப்புலிகள் போராளிகள், யுத்தமுனையில் இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆகியோரின் மரணத்துக்கு முழுப் பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும்.
“திருவாளர்கள். சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே கொள்கையின் அடிப்படையில், 2004ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை இவ்விருவரும் அறிந்திருந்தனர்.
தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருந்தால் 2004ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும். அன்றேல் யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்திருக்கும். இதன் அர்த்தம் யாதெனில் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். மரணம் எதுவும் ஏற்பட்டிருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் ஓர் இழப்பும் இல்லாமல் காப்பாற்றப்பட்டிருக்கும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago