Editorial / 2024 ஜூன் 13 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் கவனத்தில் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து வரும் கட்சிகளையும் அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் நம்பலாம் எனவும், ஆனால் தேர்தலுக்கு சற்று முன்னர் தமது கொள்கைகளை மாற்றிக்கொள்பவர்கள் தேர்தல் கேலரியில் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அதே அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவும் இந்தக் கட்சிகளின் இரட்டை வேடத்திற்குச் சான்றாகும்.' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
25 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago