Editorial / 2024 ஜூலை 12 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம்மக்களுக்கு எதிரான திகன கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை.எனவே இது தொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய அவர் தொடர்ந்து கூறுகையில்,
முஸ்லிம்மக்களுக்கு எதிராக 2018இல் திகன கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் விசாணை மேற்கொண்டது. ஆனால் கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை.
எனவே அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
16 minute ago
30 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
45 minute ago
1 hours ago