2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

’தென் இலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்’

Editorial   / 2020 செப்டெம்பர் 05 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மொழி மூத்த மொழியென இந்திய உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் கூறப்படுகின்றதென தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தான் அதனை கூறிய போது, தென்னிலங்கையில் உள்ளவர்கள் அதனை அறியாதவர்கள் போல நடிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சி சந்தைக்கு அருகில் இன்று (05) நடைபெற்ற மக்கள் சந்திபொன்றில் ​கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

தன்மை நாடாளுமன்றத்துக்கு​ தெரிவு செய்து மக்கள் தனது பொறுப்புக்களை அதிகரித்துள்ளனர் என்றும், தனித்து பயணிப்பது தனக்கொரு புதிய அரசியல் அனுபவமாக உள்ளதெனவும் தெரிவித்தார்.

தமிழ் தலைமையகள் காலத்துக்கு காலம் செய்வது ஒன்றும் சொல்வது ஒன்றுமாக இருந்த காரணத்தாலேயே மக்களுக்கு அரசியல் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதெனவும்,  தற்போ​​தைய மாற்றம் தமிழ் தேசியத்தின் எழுச்சிக்கு வழி செய்யும் என்றும் தெரிவித்தார். 

தென்னிலங்கை அரசியல் சக்திகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகலரும் தன்மீது பெரும் அவதூறுகளை சாட்டியுள்ளனர் எனத் தெரிவித்த அவர்,  அவற்றை நம்பாது தனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதன்படி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற நிலைதான் எமது அரசியலின் முதல் பிழையாகவும் தோல்வியாகவும் அமைகின்றது எனத் தெரிவித்த அவர்,  தேர்தலில் வெற்றி பெற்ற எனக்கு முன்னால் மிகப் பெரும் கடமைகள் காத்திருக்கின்றன என்றார்.

இப்போது, நாடாளுமன்றத்தில் தனக்கு எதிர்ப்பு வருகின்ற போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மௌனிகளாக இருக்கின்றார்கள் என்று தெரிவித்த அவர், தான் அவர்களுக்காத்தான் மறந்துபோயுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 

தமிழ் மொழி உலகின் மூத்த மொழி என்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கூறப்படுகின்றதென தெரிவித்துள்ள அவர், அதனை தான் கூறும்போது தென்னிலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள் என்றும், சாடினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X