J.A. George / 2020 நவம்பர் 06 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்றைய தினம் 383 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்கள் அனைவரும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்படையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 92 ஆக உயர்வடைந்துள்ளது.
அதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து 765 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து நாளொன்றில் அதிகளவானோர் குணமடைந்த நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கையுடன், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக மரணங்கள் நேற்று(05) பதிவாகின.
நேற்றைய நாளில் 5 மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணரத்னவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையுடன், நாட்டில் இதுவரையில், கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மரணித்த 5 பேரில், மூன்று பேர் வீடுகளிலேயே மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
29 minute ago
45 minute ago
54 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
54 minute ago
58 minute ago