Editorial / 2020 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றவர்கள் எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டடியலில் இடமளிக்கபோவதில்லை என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்.
சுற்றிவளைத்து கல்லெறியும்போதும், வலுவான ஒரு ஆரம்பத்தை ஐக்கிய மக்கள் சக்தியால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதெனவும், நாட்டு மக்களுக்கு தேர்தல் களத்தில் இருக்கின்ற ஒரேயொரு மாற்றி சக்தியாக அக்கட்சி மட்டுமே உள்ளதெனவும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அரசியல் களத்துக்கு முதல் அடி எடுத்து வகைக்கும்போதே வலுவான அணியாக ஐக்கிய மக்கள் சக்தியால் உருவெடுக்க முடிந்துள்ளதென தெரிவித்த அவர், மொட்டுக் கட்சி உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் உருவெடுப்பதற்காக இரு வருடம் சென்றதெனவும் தெரிவித்தார்.
அத்தோடு மொட்டுக் கட்சி 2 நாடாளுமன்ற தேர்தலை வெற்றிக்கொள்ள 4 வருட காலத்தை எடுத்துக்கொண்டதென தெரிவித்த அவர், குறுகிய காலத்தில் தேர்தல் களத்துக்குள் பெருமளவு ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியே உள்ளதெனவும் தெரிவித்தார்.
9 minute ago
22 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
3 hours ago
6 hours ago