2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நலன்புரி செயற்பாடுகளை ஆராய இராணுவ அலுவலர்கள்

Editorial   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் இராணுவ அலுவலர்களை நியமிக்குமாறு தொடர்புடைய தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் (01) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த ஆலோசனையை வழங்கினார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக அனர்த்தத்துக்கு உள்ளான மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்ற மீளாய்வுக்காக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தற்போது கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்த மக்கள் பல அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதனால் அவை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X