2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெறுவது உறுதி

Editorial   / 2017 ஜூலை 16 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என, இன்று (16) மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹகீம், மனோ கணேசன், ரிஷாட் பதியூதின், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அநுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்துக்கான  உத்தேச திருத்த விதிகள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X