Editorial / 2022 ஜனவரி 30 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எனினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு திறந்திருக்கும் போதே, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால், சகலரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .