Janu / 2026 மார்ச் 24 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய QR கொடுப்பனவு முறையின் பயன்பாட்டை துரிதப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொருளாதார வினைத்திறன், நிதி உள்ளடக்கம் (Financial Inclusion) மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதை அரசாங்கம் ஒரு தேசிய முன்னுரிமையாக அடையாளம் கண்டுள்ளது. நாட்டில் அன்றாட சில்லறை பரிவர்த்தனைகளுக்கு அதிகப்படியான ரொக்கப் பணம் (Cash) பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
Lanka QR உட்கட்டமைப்பானது தற்போது 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் சுமார் 30 மொபைல் செயலிகளுடன் (Mobile Apps) செயற்பாட்டில் இருந்தபோதிலும், அவற்றின் பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் LankaQR ஊடாக சுமார் 274,000 பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளதுடன், அதன் மொத்த பெறுமதி சுமார் 1.18 பில்லியன் ரூபாவாகும்.
இது சராசரியாக மாதத்திற்கு சுமார் 90,000 பரிவர்த்தனைகள் என்பதுடன், அதன் பெறுமதி சுமார் 390 மில்லியன் ரூபாவாகும். இதன்படி, QR குறியீடு ஊடாக மேற்கொள்ளப்படும் ஒரு சராசரி பரிவர்த்தனையின் பெறுமதி 5,000 ரூபாவிற்கும் குறைவான மட்டத்தில் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய, 5,000 ரூபாவிற்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு பணம் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் ஆகிய இருவரிடமிருந்தும் எவ்வித மேலதிக கட்டணமும் இன்றி, QR குறியீடு அடிப்படையிலான டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago