2025 மே 08, வியாழக்கிழமை

பதவியில் நீடிக்க மாத்தளை மேயருக்கு தற்காலிக தடை

Editorial   / 2020 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மேயர் டல்ஜித் அலுவிஹாரேவுக்கு  குறித்த பதவியில் நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநரால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

1989 இலக்கம் 12 மாகாண சபை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஆளுநரால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேயரின் அதிகாரங்கள் பிரதி மேயருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, டல்ஜித் அலுவிஹாரவால் இழைக்கப்பட்ட தவறுகள் தொடர்பில் ஆராய ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 03 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X