2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பரிசோதனைகளின் பின்பு மாணவர்களை விடுவிப்போம் - இராணுவம்

Editorial   / 2020 பெப்ரவரி 01 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன வூஹான் நகரிலிருந்து இலங்கை மாணவர்களை அழைத்துவருதற்காக அனுப்பட்ட விமானம் இன்று காலை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.

33 இலங்கை மாணவர்கள், அவர்களது குடும்பந்தை சேர்ந்தவர்களையும் இந்த விமானத்தில் அழைத்து வந்துள்ளதாகவும்,  அவர்கள் தற்போது தியதலாவைக்கு மருத்துவ பரிசோதனை நிமித்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாணவர்களுக்கு நோய்த் தொற்று உள்ளதா என்பது தொடர்பாக ஆராய தியதலாவை இராணுவ முகாமுக்குள் தனியானதொரு கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், மேற்படி சகல மாணவர்களையும் முறையாக மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்தியதன் பின்னர் விடுவிக்க தீர்மானித்துள்ளதாக இராணும் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X