Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Nirosh / 2020 ஒக்டோபர் 10 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் - பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை, மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 21 மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவர்கள் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தால் பல்கலைக்கழகத்துக்கும், துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது கலைப்பீடச் சபை ஏக மனதாகத் தீர்மானித்திருந்தது.
இதேவேளை தடையுத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான தடையுத்தரவுக் கடிதம், நேற்றிரவு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவால் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 12 மாணவர்களுக்கு காணொலி ஆதாரங்களின் அடிப்படையில் இன்று தடையுத்தரவுப் பிறப்பிக்கப்படலாமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago