2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’பிரதமரும் பீரிஸும் பிழையாக வழிநடத்துவர்’

Editorial   / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து பாப்பரசர் மற்றும் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் நடவடிக்கைகள் இருப்பதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர், கர்தினால் மால்கம் ரஞ்சித், இன்று  குற்றம் சாட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து வத்திக்கானுக்கு விளக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து, இலங்கை கத்தோலிக்க தேவாலயம் ஏற்கனவே பரிசுத்த அமைப்புக்கு நிலைமை குறித்து விளக்கியுள்ளது என்றும் கர்தினால் மால்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டினார்.
 
ஜெனீவாவில் உள்ள யூஎன்எச்சிஆருக்கு இந்த பிரச்சினையை வத்திக்கான் விரைவில் பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து போப் பிரான்சிஸுக்கு விளக்கமளிப்பார்கள் என்ற செய்தியையும் கர்தினால் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
 
21 ஏப்ரல் 2019 அன்று கொழும்பு மற்றும் பிற இடங்களில் உள்ள பல கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் மற்றும் அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான விவரங்களை பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் சமர்ப்பிப்பர் என்று அமைச்சரவை பேச்சாளர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும் இவ்விடயம் பரிசுத்த பாப்பரசர் மற்றும் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்தும் மறைக்கும் நடவடிக்கை என்று கர்தினால் குறிப்பிட்டார்.

"அரசாங்கம் சர்வதேசத்துக்குச் சென்றால் நாங்களும் அதையே செய்வோம், எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் ஏற்கனவே வத்திக்கான் பிரதிநிதியிடம் நீதி குறித்து விளக்கினோம், மேலும் இந்த விடயம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்படும் என்று அவர்கள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்" என்று ஆண்டகை கூறினார்.
 
தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களைக் காப்பாற்ற ஒரு சதித்திட்டம் சாமர்த்தியமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது என்றும் அரசாங்கத்துக்கு சாதகமான சூழ்நிலையை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X