2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிரதமர் தலைமையில் விசேட ஆராய்வு

Freelancer   / 2022 ஜூலை 02 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால், இதன்போது பிரதமருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய கலந்துரையாடலில், வங்கிக் கடனை மீள செலுத்தல் மற்றும் ஊழியர்களுக்கு வேதனம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம், பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற சாகல ரத்நாயக்க, பெரும்பாலும் 15 ஆம் அல்லது 16ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கப்பல் வரும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .