2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

'பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை'

Editorial   / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் பதவியில் இருந்து விலகும் எவ்வித எண்ணமும் இல்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரருக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வருடங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தது.

எனினும், அவ்வாறான எவ்வித எண்ணமும் தமக்கு இல்லையென அவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வௌியிட்டுள்ளது.

தம்மை மக்கள் ஐந்து வருடங்களுக்கு தெரிவு செய்துள்ளதாகவும், பதவிக்காலம் நிறைவடையும் முன்னர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லையெனவும் பிரதமர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .