Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 01 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரதமரின் ஒப்புதலுடனான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, அதிகார பகிர்வு மற்றும் தேர்தல் முறைகள் ஆகியவை தொடர்பான அரசமைப்பு சீர்திருத்த செயன்முறை, அதனைத்து பங்குதார்களுடனும் முன்னெடுக்கப்பட்டு தாமதமின்றி முடிக்கப்படுமென புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பானது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களால் அங்கிகரிக்கப்பட்டும். நாடாளுமன்றத்தில் குறைந்தது 25 சதவீதமாவது பெண்கள் தேசியப் பட்டியலில் வருமாறு சட்டமியற்றப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம், கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நேற்று (31) வெளியிட்டப்பட்டது. விஞ்ஞாபனத்தின் பிரதி, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கருக்கு முதலில் கையளிக்கப்பட்டது.
இந்த தேர்தல் விஞ்ஞாபனம் " சஜித் சமூகப் புரட்சி" என பெயரிடப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னோக்கிய பயணத்துக்கு எல்லை இல்லை. ஒன்றாய் நாம் அதனை நிரூபிப்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
47 minute ago
55 minute ago