Shanmugan Murugavel / 2021 மார்ச் 13 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் புர்காவைத் தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரத்தில், தான் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சரான, ஓய்வுபெற்ற றியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
களுத்துறையிலுள்ள முனசிங்கே அரமயவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே குறித்த கருத்துகளை வீரசேகர வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை, நேரடியாக புர்கா பாதிப்பதாக வீரசேகர கூறியுள்ளார்.
தவிர, மதத் தீவிரவாதத்தின் அடையாளமொன்றாக புர்கா இருக்கின்றது எனவும் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பதிவு செய்யப்படாத 1,000க்கும் மேற்பட்ட மதராஸாக்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை தாங்கள் எடுப்போமென வீரசேகர மேலும் கூறியுள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago