Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 13 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல்
மீண்டும் தலைத்தூக்குவதற்குப் புலிகளுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காதெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து, கழுகுப் பார்வையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறுவர் அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் சர்ச்சைக்குரிய அந்த உரை குறித்த விசாரணைகள் நியாயமாக இடம்பெறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறிகொத்தாவில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க, “அவருக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு, நியாயமான அறிக்கையொன்றை, கட்சியின் தலைவருக்குச் சமர்பிக்கும்“ என்றார்.
“ஆனால், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கட்சி உறுப்புரிமையும் பறிக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்” என்று தெரிவித்த அவர், “வடக்கு மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதற்காக சர்ச்சைக்குரிய உரை நிகழ்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டியது மக்கள் தலைவர்கள் சகலரினதும் கடமையாகும்” என்றார்.
“தெற்கு மக்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேற்படி விவகாரத்தில் சிறந்த தீர்மானம் ஒன்றை எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புலிகளை நினைவுகூர்ந்த 5 சம்பவங்கள் தொடர்பிலான காணொளிகள் கிடைகப்பெற்றுள்ளன. இந்நிலையில், “காணொளிகளை மையப்படுத்தி, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தக் காட்சிகளில் உள்ளவர்கள் தொடர்பிலான விவரங்களும் அறியப்பட்டுள்ளன.
“அனுமதியளிக்கப்படாத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு அவதானத்துடன் இருக்கும். மேற்படி நினைவு கூரும் நிகழ்வுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதில்லை. மாறாகத் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்படுபவை என்றும் அறியமுடிந்துள்ளது.”
நினைவுகூர்தலை, உள்நாட்டு மக்களும் விரும்பவில்லை. புலம்பெயர் அமைப்புகளின் வழிநடத்தலின் பிரகாரமே, குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனத் தெரியவந்துள்ளது” என்றார்.
39 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago
1 hours ago