R.Maheshwary / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளாக, நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மேற்படி தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 32 சந்தேகநபர்களுள், இவர்கள் இருவரும் அடங்குவதாகவும் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, மேலும் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், இந்தத் தற்கொலைத் தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான் ஹாஸிம், 2016ஆம் ஆண்டே பிரிவினைவாதம், வஹாப்வதம் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் நௌபர் மௌலவி என்பவர், 2014ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்து வந்து, இது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன், சஹ்ரான் உள்ளிட்டவர்களுக்கு, வஹாப்வாதம், இஸ்லாமிய தீவிரவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்டவைகள் குறித்து, நௌபர் மௌலவியே பயிற்சியளித்துள்ளார் என்பதும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றார்.
இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 217 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 75 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்த அமைச்சர் வீரசேகர, தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள், நேற்று முன்தினமும் (05) கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
வெளிநாடுகளில் இருந்தவாறு இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் 54 பேரில் 50 பேர், நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்றுமொரு சந்தேகநபரான சஹாரா எனப்படும் புலஸ்தினி என்பவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து, இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் அவ்வாறு உயிருடன் இருந்தால், சிவப்பு எச்சரிக்கை விடுத்து இன்டபோல் பொலிஸின் உதவியுடன் அவரைக் கைதுசெய்வோம் என்றும் தெரிவித்த அமைச்சர், இந்த விசாரணை அறிக்கையில் மறைப்பதற்கு எதுவும் அரசாங்கத்துக்கு இல்லையெனவும் கூறினார்.
உயர்த்த ஞாயிறு தாக்குதல்களின்
சூத்திரதாரிகள்
அம்பலம்
2014 முதல் செயற்பட்டதாகத் தகவல்
ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளாக, நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடத்திய விசேட ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நௌபர் மௌலவி என்பவர், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்த அமைச்சர், 2014ஆம் ஆண்டில், மேற்படி நபரால், ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகள் பரப்பப்பட்டு வந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் போது தற்கொலைக் குண்டுதாரியாகச் செயற்பட்ட சஹ்ரான் ஹாஸிம், 2016ஆம் ஆண்டில், அடிப்படைவாதச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார் என்றும் அவருக்கான உதவி, ஒத்தாசைகளை, நௌபர் மௌலவி என்பவரே வழங்கியுள்ளார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லையென்று தெரிவித்த அமைச்சர், இதுவரையில் 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், இதுவரையில் 211 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 75 பேர், தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், அமைச்சர் வீரசேகர மேலும் கூறினார்.
21 minute ago
25 minute ago
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
29 minute ago
2 hours ago