Freelancer / 2024 ஜூன் 17 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ரக்மல்கம, பலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில், கொடகம சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள, லட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம பகுதிக்கு நீர் கொண்டு செல்லும் குழாயில் கார் மோதியதால் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று (17) அதிகாலையில் இருந்து விபத்து இடம்பெற்ற இடத்திலுள்ள பெரிய நீர் குழாயில் இருந்து பாரிய அளவில் நீர் வௌியேறி வருவதாகவும், நீரின் வேகம் காரணமாக குறித்த இடத்திற்கு அருகில் இருந்த மின்கம்பமும் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, விபத்தின் போது காரில் பயணித்த நால்வர் சிறு காயங்களுடன் ஹோமாகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். R
19 minute ago
22 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
55 minute ago
1 hours ago