Editorial / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் சாவகச்சேரி நகரை கடந்துள்ளது.
ஐந்தாம் நாளான இன்று (07) காலை கிளிநொச்சியில் பேரணி ஆரம்பமானது.
முகமாலையை வந்தடைந்த போது மக்கள் அணிதிரண்டு யாழ்ப்பாணத்துக்கு பேரணியை வரவேற்றனர்.
வடக்கு - கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.






1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025