2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொருத்து வீட்டுக்கு எதிராக வழக்கு

Editorial   / 2017 ஜூலை 14 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்கப்படும் பொருத்து வீடுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், உயர் நீதிமன்றில் நேற்று (13) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

“பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிப்பதற்கு, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

“இந்தப் பொருத்து வீடுகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவை என, பல தரப்பினர்கள் சுட்டிக்காட்டிய போதும் பொருத்து வீடுகள் நிர்மாணிப்பதில், மீள்குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ளார்” என, சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்தே, தடை உத்தரவு கோரும் இந்த மனு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருத்து வீடுகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு, இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X